தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்களின் இரண்டாவது நாள் இன்று.
வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்ததன் பின்பு அதன் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.