பிறக்கும் இப்புத்தாண்டு இலங்கை வாழ் சமூகத்தினருக்கு வளமான வாழ்வும் குறைவற்ற செல்வமும், கிடைத்திட வேண்டும். சித்திரைப்பிறப்பு சகல வகையிலும் வசந்தத்தை உருவாக்கக்கூடியது. இன, மத,மொழி,சாதி,சமய வேறுபாடுகளைக் கலைந்து எல்லோரும் ஒருதாய் மக்களென உலகறியச்செய்யும் சிறப்பு நாளாகும்.
இச்சித்திரைப்புத்தாண்டில் மனிதம் நிரந்தரமாய் நிலைத்து புதிய சாதனைகளையும், வெற்றிகளையும் பெற்று வழிமறிக்கும் தடைகளைத் தகர்த்து மகிழ்ச்சி பொங்கும் நன்நாளாக அமைய இறைவனை பிராத்திப்பதோடு இந்நாளில் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்;சியடைகின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நமது சமூகம் கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் செயற்பாடுகளிலும் இன்னும் எழுச்சி கொள்ள வேண்டும். அதற்கு எங்களின் முயற்சி, அறிவு, ஆற்றல் என்பன பங்களிப்பு செய்ய வேண்டும். இவற்றை முன்னெடுத்து நாம் ஏனைய சமூகங்களுக்கு நிகரான சமூகமாக வாழ இந்நாளில் திடசங்கற்பம் கொள்வோமாக. பிறக்கும் இச் சித்திரைப் புத்தாண்டு நமது பலம், ஒற்றுமை என்பவற்றை நிலை நிறுத்தி எழுச்சி கொள்ளும் சமூகமாய் இன்புற்று வாழ்வதற்கு வழிசமைக்கட்டும்.கடந்த வருடம் பெருந்தோட்ட தொழிலாளர் எத்தனை துன்பங்களை அனுபவித்திருந்தாலும் இனிவரும் காலங்கள் நலமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை மாத்திரமே எமது மக்களுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.
தாங்கள் என்னதான் புறக்கணிக்கப்பட்டாலும் ஒதுக்கப்பட்டாலும் கூட தமது தெய்வ நம்பிக்கை, விருந்தோம்பல்,தொழில் கடமைகள்;, இவை எதிலுமே எமது மக்கள் புறக்கணிக்கப்படவில்லை. நாம் இன்றும் அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் பெற வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.எமது மக்களின் அடையாளம் மற்றும் இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும் அதற்கு நாங்கள் தொலைநோக்கு சிந்தனையோடு செயற்படவேண்டும் எனவே எல்லாம் வல்ல இறைவன் எமது மக்களுக்கு வழங்கியுள்ள திடமான மனநிலையும் கிடைத்ததை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் பண்பும் தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமெனவும். எதிர்வரும் காலங்களை நாமே சிறப்பாக்கிக் கொள்ளும் மன உறுதியை எமது சமூகம் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
கேதீஸ்