தட்டுப்பாட்டை நிவர்த்திக்க 18,163 மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது!

0
100

உப்பு பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக மே 22 முதல் ஜூன் 7 வரையான காலப்பகுதியில் மொத்தமாக 18,163 மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மொத்த மதிப்பு ரூ. 1,291 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை உப்பு இறக்குமதிக்காக 571 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக 30,000 மெற்றிக்தொன் உப்பை இறக்குமதி செய்யத்திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here