தந்தையை காண இத்தாலியில் இருந்து வந்த மகனுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி!

0
27

களுத்துறையில் உள்ள நாகொட பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னரே உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், வீட்டில் அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.இவ்வாறான நிலையில், உயிரிழந்தவரின் மகன் இத்தாலியில் வாழ்ந்து வந்த நிலையில் அவரது தந்தைக்கு 6 மாதங்களாக தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட போதிலும் அவர் பதிலளிக்கவில்லை.

இதன் காரணமாக தந்தையை பார்ப்பதற்காக இத்தாலியில் இருந்து மகன் இலங்கை வந்துள்ளார்.

வீட்டுக்கு சென்ற மகன் கதவைத் திறந்தபோது, ​​உருகிய சதையுடன் கூடிய எலும்புக்கூடுகள் மட்டுமே கட்டிலில் கிடந்ததனை மகன் அவதானித்தை கண்டு அதிர்ச்சியடைத்துள்ளார்.தற்போது உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இவரின் தந்தையா என்பதை உறுதிப்படுத்த DNA என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here