தனது தந்தை பற்றி மகளால் எழுதப்பட்ட இலங்கையில் முதலாவது நூல்!

0
108

இலங்கை அரசியல் வரலாற்றில் புது வரலாற்றை உருவாக்கிய மிக எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஆழமான கதையை அவரது மகளின் பார்வையால் கூறும் ”ஜனாதிபதி அப்பா” நூல் வெளியீட்டு விழா இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

தனது தந்தையார் பிரதேச அரசியல்வாதியாக அரசியல் வாழ்வை ஆரம்பித்து, ஜனாதிபதி பதவி வரையான முன்னேற்ற பயணத்தை மேற்கொண்டபோது அவரது மூத்த மகளாக சத்துரிக்கா சிறிசேன பெற்ற அனுபவங்களைப்பற்றியே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி வகிக்கும் தனது தந்தை தொடர்பில் மகளால் எழுதப்பட்ட முதலாவது வாழ்க்கைச் சரிதமாக இந்த நூல் வரலாற்றில் இடம்பெறுகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்பாராத பல சவால்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அந்த சவால்களை தாங்கிக்கொண்ட முறை தொடர்பில் சாதாரண மக்களுக்கு தெரிந்திராத பல தகவல்கள் மற்றும் மேல் மாகாணத்திலிருந்து வட மத்திய மாகாணத்துக்கு வாழச்சென்ற துணிச்சலான விவசாய குடும்பத்தின் உண்மையான வாழ்க்கைக் கதை இவ்வாறு இலக்கியமாக உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நூலின் முதற் பிரதி சத்துரிக்கா சிறிசேனவால் ஜனாதிபதியிடமும், அவரின் பாரியரான ஜயந்தி சிறிசேனவிடமும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here