தம்மை சுதந்திரமாக செயற்படவிடாது போனால் தாம், பதவி விலகப் போவதாக கண்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க எச்சரித்துள்ளார்.
அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலேயே எனது அறிக்கையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கோப் குழுவுக்கு அரசநிறுவனங்கள் தொடர்பில் வழங்கியுள்ள அறிக்கை தொடர்பில் அமைச்சர்கள் சிலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் நிதியாள்கை நிபுணர்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் தம்மை விமர்சிப்பவர்களுக்காக அல்ல. மக்களின் நலனுக்காகவே தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.