நுவரெலியா, பொரலந்தை – புலுவல பகுதியில் உள்ள வீதியை கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணன் கார்பட் வீதியாக மாற்றியமைத்து வருகின்றார்.
புலுவல என்ற பகுதியில் குறைந்த அளவிலான மக்கள் தொகையினர் வாழந்து வருகின்றனர் , பொதுவாக அந்த வீதியில் ஆள் நடமாட்டம் என்பது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படும்.
இந்த நிலையில் அவ்வாறான ஒரு வீதிக்கு பெருந்தொகை செலவு செய்வதில் எந்த பயணும் இல்லை என அந்த பகுதியில் வாழும் மக்களே விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் இராஜாங்க அமைச்சர் பீட்ரூ தோட்ட பகுதி வீதியை புனரமைக்கவுள்ளதாக குறிப்பிட்டு, அந்த பகுதிக்குள் மணல், கல்போன்ற பொருட்களை இறக்கியுள்ளார்.
இதன் ஊடாக பீட்ரூ தோட்ட வீதி புனரமைக்கப்படும் என அந்த பகுதி மக்களை முட்டாளாக்கியுள்ளார். வீதி அமைக்கப்படும் என காத்திருந்த மக்களை ஏமாற்றிவிட்டு அங்கிருந்த பொருட்களை புலுவல பகுதிக்கு கொண்டு சென்று அந்த வீதியை புனரமைத்து வருகின்றார் என தெரியவந்துள்ளது.
எனினும் பொரலந்தை – பீட்ரூ தோட்ட பகுதியில் அதிக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியின் வீதிகள் பல வருடங்களாக சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. அதனை புனரமைக்க கல்வி இராஜாங்க அமைச்சர் இதுவரையிலும் முன் வரவில்லை. மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்கின்றார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்பவர்கள் அந்த வீதியில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகின்றர். மக்கள் இல்லாத பகுதியில் கார்ப்பட் வீதி அமைக்கும் அமைச்சர், அதிக மக்கள், குழந்தை, சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வாழும் பகுதியை குறித்து அக்கறைப்படாதது ஏன் என்ன மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, தனது சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட தேவைக்காகவும் மாத்திரமே அமைச்சர் மக்கள் இல்லாத பகுதி வீதியை புனரமைப்பதாக பொரலந்தை பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே மக்கள் வாழும் பகுதியை குறித்து கவனம் செலுத்துமாறு இந்த செய்தியின் ஊடாக இராஜாங்க அமைச்சருக்கு மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.