தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதம் மக்கள் பெரும் அவதி.

0
199

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதம் காணப்படுவதாகவும் இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பல குடும்பங்கள் தங்களது அத்திவசிய உணவின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன குறிப்பாக ஹட்டன், பொகவந்தலா, புளியாவத்தை, நோர்வூட், வெஞ்சர் வெலிஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் குறித்த குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுகள் வழங்கும் பொறுப்பினை அப்பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த கிராம சேவகர்கள் உரிய நேரத்தில் குறித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக இந்த குடும்பங்கள் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தினை பொறுத்த வரையில் பெரும்பாலான குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுகளையே கையிருப்பில் வைத்திருப்பர் இன்னும் சில குடும்பங்கள் அன்றாடம் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்வர் இந்நிலையில் திடீரென தனிமைப்படுத்தப்படுவதனால் அதிகமானவர்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு வகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையம் ஏற்படுகின்றன.

இதனை நிவர்த்தி செய்வதற்காகவே அரசாங்கம் இரண்டு கிழமைக்கு தேவையான உணவு பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற போதிலும் இதனை உரிய முறையில் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படாததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். சில கிராம சேவகர்கள் 14 நாட்கள் முடிந்த பின்பே இவர்களுக்கு குறித்த உணவு பொருட்கள் வழங்குவதாகவும் இன்னும் சிலர் முடிந்த பின் கூட வழங்காது இருப்பதாகவும் இது குறித்து எந்த ஒரு அரசியல் மற்றும் அதிகாரிகள் தேடிப்பார்ப்பதில்லை என்றும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தனது வாசலில் 14 நாட்களுக்கு எவரும் தொடர்பினை பேணக்கூடாது என்று ஒட்டிவிட்டு செல்வதனால் அவசரத்திற்கு ஒரு பொருட்கள் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் ஒரு சில அயலவர்களின் உதவிகள் காரணமாக ஒவ்வொரும் நாளும் சமாளித்துக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இரானுவ தளபதி சவேந்திர சில்வா அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் மின் அஞசல் மூலம் தங்கள் படும் துயரங்களை தெரிவித்துள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறான போதிலும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படுவர்களின் நலன் குறித்து இதை அக்கறை செலுத்தி அவர்களுக்கு தேவையான வற்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற உலர் உணவு பொருட்கள் உரிய நேரத்தில் உரியவர்களை சென்றடைகின்றனவா அல்லது அவை முறையாக பகிறப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்றும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here