தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என அறிவிப்பு – அவதிப்படப்போகும் மக்கள்

0
121

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பின்னர் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேருந்துகளை இயக்குவதற்கு எரிபொருள் இல்லாத காரணத்தினால் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.

உரிமையாளர்களுக்கு நேரடியாக வருமானம் ஈட்டும் முறைமையை உடனடியாக உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் ஜூலை மாதம் மீண்டும் பேருந்து கட்டணங்களில் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here