ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டான தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினமும் இடம்பெறுகிறது. நேற்றைய தினம் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானது. நேற்றைய நாளில் மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரிகள் , தேர்தல் ஆணையகம், அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிசார் ஆகியோர் தமது வாக்குகளை செலுத்தினர்.
இன்றும் நாளையும் முப்படையினர் உட்பட ஏனைய அரச நிறுவன அலுவலக அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் வாக்களிக்க தவறிய பொலிஸ் அதிகாரிகள் நாளைய தினம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இன்று வாக்களிக்க தவறும் அரச அதிகாரிகள் எதிர்வரும் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் தமது சேவை இடத்திலுள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.