தபாற்துறை தொழிற்சங்கத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேற்றைய கலந்துரையாடலானது தோல்வியில் முடிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பல்வேறு தரப்பினருடனும் தபாற்துறை தொழிற்சங்கத்தினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்திருப்பதாக இந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் குறித்த பணி பகிஸ்கரிப்பு தொடர்பில் தீர்மானமான பேச்சுவார்த்தை ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயளாலர் தலைமையில் இடம்பெறவுள்ளதாக கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.