பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.11.06.2018 அன்று மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுற்று நிரூபத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு தெரிவித்து 11.06.2018 அன்று மாலை முதல் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் நுவரெலியா, அட்டன், தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற பாணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மலையகத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனால் பல்வேறு தேவைகளுக்காக அஞ்சல் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)