எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22.01.2018 அன்று ஆரம்பமானது.
இதற்கிணங்க தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22.01.2018 அன்று அட்டன் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் அட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த தபால் மூல வாக்களிப்பில் அட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் வாக்களித்தனர்.
(க.கிஷாந்தன்)