தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை உத்தரவு

0
147

எதிர்வரும் 25ஆம் திகதி வரை தமிழகத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மதுரை மேல்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம்-கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கவுள்ள சேவல் சண்டைக்கு தடை கோரி, மதுரை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில், சேவல் சண்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் அறிவிக்கவேண்டும் எனவும், அதுவரை தமிழகம் முழுவதும் சேவல் சண்டைக்கு அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here