தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை குறித்து மஹிந்த அணி அதிருப்தி!

0
10

” தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும், ஈழம் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அக்கட்சி உள்ளது. இது பற்றி விழிப்பாகவே இருக்க வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப்பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” தமிழகத்தில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி மாநாட்டை நடத்தி இருந்தது. எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் தமிழக சட்டமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் அக்கட்சி குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு வெற்றியை பெறுவதற்குரிய சாத்தியம் அதிகம்.
எனினும், இலங்கை தொடர்பில் தவறான அரசியல் கொள்கையையே அவர் கடைபிடித்துவருகின்றார்.

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீளப் பெறுமாறு பிரதமர் மோடியிடம் அவர் வலியுறுத்துகின்றார். இந்திய மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினருக்கிடையிலான பிரச்சினை பற்றி கதைக்கின்றார். அத்துடன், ஈழம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இப்படியான பிரச்சினைகள் அடுத்து வரும் மாதங்களில் எழக்கூடும். எனவே, ஏனைய விடயங்கள் பற்றி மட்டும் அல்லாமல் இவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.” – எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here