வத்தளையில் காலாவதியான பல மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்!

0
103

வத்தளையில் காலாவதியான சுமார் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த பேரீச்சம்பழங்கள் 3,620 கிலோ கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையைத் தொடர்ந்து, காலாவதியான பேரீச்சம்பழ தொகுதி உடனடியாக சீல் வைக்கப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நுகர்வோர், பாதுகாப்பற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here