தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆர்.ராஜாராம் தெரிவிப்பு!!

0
122

நுவரெலியா மாநகர சபையின் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் நேற்று நடைபெற்ற சத்தியபிரமாண நிகழ்வில் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் நேற்று நுவரெலியா மாநகர சபைக்கு ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 13 உறுப்பினர்களும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தொகுத்து வழங்களில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிப்பட்டிருந்தது.

அதே நேரம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தமிழர்கள் யாருக்கும் அங்கு உரை நிகழ்த்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அதே நேரம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னால் அமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி மற்றும் நான் இருவரும் அமர்ந்திருந்த பொழுதும் அதனை அங்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கண்டு கொள்ளாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை நான் ஒரு மத்திய மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணி இம்முறை ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.

எனவே எங்களுடைய உறுப்பினர்களுக்கும் உரை நிகழ்த்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்க வேண்டும்.

இதே நிலை முற்போக்கு கூட்டணியின் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களும் பட்டியலில் இருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள்.எனவே இதனை திட்டமிட்ட அடிப்படையில் ஜக்கிய தேசிய கட்சிக்கு நுவரெலியா மாவட்டத்திற்கு தலைமை தாங்ககின்றவர்கள் செய்கின்றார்கள்.

இது தொடர்பாக ஜக்கிய தேசிய கட்சியின் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் ஒரு கட்சி என்ற அடிப்படையில் சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here