கோவாவில் காதலரை மணமுடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

0
40

தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழில் இப்போது இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனோடு அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே ரிலீஸாகாமல் இழுத்துக்கொண்டே செல்வதால் இப்போதைக்கு அவரின் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை.

இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் திருமணம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கோவாவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here