அகில இலங்கை ரீதியாக தமிழ் தினப்போட்டியில் முதல் முறையாக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று நு டயகம மேற்கு 02 தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்கும் வினுஷகாந் விகாசன் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் முதலாம் பிரிவில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அண்மை காலமாக இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி அனைவரையும் போற்றதக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிபர் ;வேலுசாமி கோபால்ராஜ் தெரிவிக்கையில் இப்பாடசாலையில் அதிகமான குறைப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் நேரகாலம் பாரமல் உணர்வுபூர்வமான செயல்பாடுகளால் மாணவர்களின் கல்வி மட்டம் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.
ஆசிரியர்களின் முயற்சிகளின் மூலம் தரம் 05 புலமைபரிசில் பரிட்சை தமிழ் தினப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துவருகின்றனர்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வளங்கள் மிகவும் முக்கியம் எங்களுடைய பாடசாலைக்கு தேவையான வசதிகள் கிடைத்தால் மேலும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பாக அமையும்.
இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என இவர் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்