தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டமும் பேரணியும் தலவாகலை நகரசைபை மைதானத்தில் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகனேசன் தலைமையிலும் கூட்டணியின் பிரதிதலைவர்களும் அமைச்சர்களுமான பழனி திகாம்பரம்,மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தலைமையில் 07.05.2018. திங்கள் கிழமை காலை 11.30 மணிக்கு இடம் பெற்றதுஇதேவேலை தலவாகலையில் இடம் பெற்ற மேதின நிகழ்விற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித்மத்துகம பண்டார அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின பேரணியானது தலவாகலை நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு தலவாகலை நகரசபை மைதானத்தில் அமைக்கபட்டிருந்த மேடையை வந்தடைந்தது.
இந்த பேரணியில் அமைச்சர்களான மனோகனேஷன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதகிருஸ்ணன் , உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மத்திய காணசபை உறுப்பினர்களான, சோ.ஸ்ரீதரன், எம். உதயகுமார் ,சிங்பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, எம்.ராம் ,மற்றுத பிரடதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெறுந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்ககது.
எஸ்.சதிஸ்,டி.சந்ரு