தமிழ் மொழித் தினப்போட்டியில் நுஃலோவர் கிறன்லி த.வித்தியாலயம் சாதனை!!

0
127

தமிழ் மொழித் தினப்போட்டியில் சாதனை நுவரெலியா கல்வி வலயத்தில் அகில இலங்கை தமிழ் மொழித் தினப்போட்டி . கடந்த 02ம் 03 ம் ஆகிய தினங்களில் கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலையத்தில் நடைப்பெற்றறு இப்போட்டியில் அக்கரப்பத்தனை நுஃலோவர் கிறன்லி த.வித்தியாலயம் கோட்ட மட்டம் ரீதியில் 17 இடங்களை பெற்றதுடன் வலயமட்ட போட்டிக்கு 08 பேர் தெரிவாகினர்.

இம்மாணவர்கள் 8 போட்டிகளிலும் பங்குப்பற்றி வரலாற்றில் முதல் தடவையாக வெற்றிவாகை சூடியமை பாடசாலைக்கு கிடைத்த சிறப்பு அமுசமாகும். இதன் அடிப்படையில் செல்வி.வூ.ஜனித்தா முதலாம் இடம் -பிரிவு 2- பாவோதல்செல்வி. சு.ரொசானி முதலாம் இடம் – பிரிவு 2- கட்டுரை செல்வி. ளு.தனுஜா முதலாம் இடம் – பிரிவு 3 – பாவோதல் செல்வி.ளு.ரெபேக்கா முதலாம் இடம் – பிரிவு
4 – கவிதைசெல்வி.து.நிருஷா இரண்டாம் இடம் – பிரிவு – 3 கட்டுரை

திறந்தப்போட்டி
நாடகம் – 3 இடமும் விவாதத்தில் – 3 ம் இடத்தினையும் இப்பாடசாலை தனதாக்கிகொண்டது வெற்றிப்பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா 08.05.2018 அன்று பாடசாலை அதிபர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது .

இந்நிகழ்வில். நுவரெலியா வலயக்கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் எம் ஜெயராமன் பிரிடோ நிறுவன இணைப்பாளர் கே.புஷ்பராஜ். ஆகியோர் கலந்துகொண்டனர் மாணவர்களின் வெற்றி தொடர்பாக பாடசாலை அதிபர் குழந்தைவேல் பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில் இம்மாணவர்கள் இந்த வெற்றியை பெறுவதற்கு பல ‘ சிரமங்களை எதிர்நோக்கினர்.

இப்போட்டியில் மாணவர்களை பங்குப்பற்றி வெற்றிப்பெற செய்வதற்கு ஆசிரியர்களான ஜி.யோகேஸ்வரன் டி விஜித்தா ஆகிய இருவரும் உணர்வுடன் செயல்பட்டதன் காரணமாகவே இம்மாணவர்கள் வெற்றிப்பெறவாய்ப்பாக அமைந்தது.

20180504_090839

அத்தோடு ஏனைய ஆசிரியர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர் தற்போது ஆசிரியர்கள் தங்களின் பொறுப்பு களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செயல்படுகின்ர் பாடசாலையில் இடவசதி மிகவும் குறைவாக இருந்தது தற்போது எனது முயற்சியால் மத்தியமாகாண சபை தமிழ் கல்வி அமைச்சர் மருதைபாண்டி ராமேஸ்வரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டிடம் நிர்மானிக்கபடுகின்றது.எனவே பாடசாலை முன்னேற்றத்திற்கு உழைத்த அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here