தம்புள்ளை -குருநாகல் வீதி, சமன்புர பிரதேத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபர், பாதையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.