தம்புள்ள – மஹியங்கனை வீதியை மறித்து லக்கல பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரகாகந்த நீர்தேக்க திட்டத்திற்காக தமது நிலங்கள் மற்றும் சொத்துக்களை இழந்துள்ளதாகவும், இதன்போது மகாவலி அதிகாரிகள் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சவப்பெட்டி ஒன்றை வீதியின் நடுவில் வைத்தும், அதனைச் சுற்றி நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.