தம்பேத்தன தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.தம்பேத்தன தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்,
1.தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம் – முழு சம்பளம் வழங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.
2.வலுக்கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டது – 20 கிலோ வலுக்கட்டாயமாக நிர்ணயிக்க முடியாது எனவும், தேயிலை மலைகளுக்கு ஏற்ற வகையிலே நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், 20 கிலோவாக இருந்த அடிப்படை தொகை 16 கிலோவாக குறைக்கப்பட்டது.
3.ஒவ்வொரு நிலுவைக்கும் வலுக்கட்டாயமாக 3 கிலோ தேயிலை குறைப்பு – நாளை முதல் 1 கிலோவாக மாற்றி அமைக்கப்பட்டது.
4.ஞாயிறு மற்றும் போயா நாட்கள் 1 1/2 சம்பளம் வழங்கப்படவில்லை – தற்போது வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது
5.நிபந்தனை, ஓய்வூதியத் தொழிலாளர்களுக்கு கைகாசு அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது -இனிவரும் காலங்களில் முழு சம்பளமாக வழங்கப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தோட்ட நிர்வாகத்தால் வழங்கபட்ட ஒப்புதலை ஏற்று ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்தில் இருந்து தேயிலை தூளை ஏற்றுமதிக்கு வெளியேற்ற அனுமதி வழங்கியது.