1ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எனவே, இன்னும் இரண்டு நாட்களில் அந்த பணிகளை நிறைவுசெய்ய முடியும் என்று அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் அதற்காக 334,698 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான கபொத சாதாரண தரப் பரீட்சை இந்த மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.