டிஜிட்டல் மயமாக்கலில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு உத்தேச தரவு பாதுகாப்பு அதிகார சபை அடுத்த வருடம் நிறுவப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்,
மேலும் பொது பாதுகாப்பு, பொது நலன், பொருளாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பான முக்கியமான தரவு அமைப்புகளை பராமரிக்கும் சுமார் பத்து அரசு நிறுவனங்கள் மற்றும் 124 அரசு நிறுவனங்களின் இணைய பாதுகாப்பை மேம்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 10,000 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.