தற்போதைய அரசாங்கம் அடுத்த மூன்று வருடங்களுக்கும் மேலும் ஐந்து வருடங்களுக்கும் இந்த நாட்டை ஆட்சி செய்யும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி நாவலப்பிட்டி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாவலப்பிட்டி இளைஞர் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாக கொவிட் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார்.
அந்த காலப்பகுதியில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத போதிலும், ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கம் தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் எனவும், எதிர்வரும் மூன்று வருடங்கள் மற்றும் அடுத்த ஐந்து வருடங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமே ஆட்சி செய்யும் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சுட்டிக்காட்டினார்.