தலவாகலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தலவாகலை பகுதியில் 14625மில்லிகிராம் கசிப்புடன் சந்தேகக நபர் கைது செய்யபட்டுள்ளதாக தலவாகலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் 17.05.2018. விடியற்காலை தலவாகலை விஷேட அதிரடிபடையினரால் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இவர் கைது செய்யபட்டதாக விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் பதுளை கொழும்பு இரவு நேர புகையிரத்தில் கொண்டு வந்து தலவாகலை ஹோலிருட் தோட்டபகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதும் பை ஒன்றில் மறைத்து கொண்டு வந்தே போதே இவர் கைது செய்யபட்டதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் தலவாகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபர் 17.05.2018.வியாழகிழமை நுவரெலிய நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பட உள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)