முச்சக்கரவண்டியின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதுடன் நுவரெலியா அட்டன் மார்க்க போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்
அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் சென்கிளோயர் பகுதியிலே 29.08.2017 மதியம் 12.00 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
டிக்கோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டியானது சென்கிளோயர் பகுதியில் சென்றுகொண்டிருக்கையில் பாதையோரமிருந்த ஆல மரமொன்றின் பாரிய கிளையொன்று முறிந்து முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்துள்ளதாகவும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார் முச்சக்ரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் அயலவர்கள் மீட்டு கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.
மரணனமானவர் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்