தலவாக்கலை சென்.கிளயார் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தலவாக்கலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து 10.09.2017 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெய்துவரும் பலத்த மழையினால் வீதி வழுக்கல் நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் லிந்துல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.