தலவாக்கலையில் தீடீர் தீயினால் வீடு சேதம்!!

0
111

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தலவாக்கலை ஒலிரூட் பிரதேச பகுதியில் 14.05.2018 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த வீட்டில் இருந்த தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும், மின் ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

DSC01235

தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், பிறகு எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here