தலவாக்கலையில் பாடசாலைக்கு நீர் விநியோகத்தை தடுக்கும் தோட்ட நிர்வாகம்; மக்கள் விசனம்!

0
114

தற்போது பெருந்தோட்ட நிர்வாகங்கள் பல தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல தமது பிள்ளைகளுக்கும் எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சில தோட்ட நிர்வாகங்கள் தமது நிரவாகத்திற்குப் பட்டுள்ள பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமே.

அந்த வகையில் தலவாக்கலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அபிவிருத்திக்கு குறித்த தோட்ட நிர்வாகம் தொடர்ச்சியாக பல இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டே வருவதாக தெரிய வருகிறது. குறிப்பாக இப்பாடசாலையின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களுக்கான குடிநீரும் முறையாக கிடைப்பதில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைள செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் குறிப்பிட்ட தோட்ட முகாமையாளரின் உத்தரவிற்க மைய இன்று (07) காலை உதவி முகாமையாளர் மற்றும் தோட்ட உத்தியோகத்தர் ஆகியோர் பாடசாலை அருகாமையில் சென்று இனி எக்காரணம் கொண்டும் பாடசாலை தேவைக்காக தமது தோட்ட நிர்வாகத்தின் குரிய நீரை பயன்படுத்த வேண்டாமென கூறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. தென் இந்திய தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பிரதேசத்தில் குறிப்பிட்டதொரு தோட்ட நிர்வாகியும் தமிழ் பாடசாலைக்கு நீரை வழங்க மறுக்கின்றாரே?

வேகமாக வளர்ந்து வரும் பாடசாலைகளுள் ஒன்றான இப்பாடசாலையில் நிலவும் பிரச்சினைகளுக்கான
தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. 100% பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் இப்பாடசாலைக்கு இடையூறு விளைவித்து வரும் தோட்ட நிர்வாகத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வர வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

சுஜீவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here