தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.தலவாக்கலை பாமஸ்டன் தோட்ட பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி 04.04.2018 அன்று மாலை 6.30 மணியளவில் பாமஸ்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் பாமஸ்டன் தோட்டப்பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி மற்றும் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)