தலவாக்கலையில் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டு விற்பணை செய்யப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மஞ்சநாயக்க வீட்டிலிருந்து மீட்க்கப்பட்டுள்ள 11 வயது சிறுவனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் பராமரிப்பு நிலையைத்தில் தங்கவைக்க நுவரெலியா நீதிமன்ற மாவட்ட நீதவான் பிரமோத ஜெயசேகர உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் விதுர்ஷன் வயது 11 என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்திற்கு முன் கடந்த 4ஆம் திகதி அக்கரப்பத்தனை போட்மோர் தோட்ட 5 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு காலி பகுதிக்கு விற்பணை செய்ததாக தலவாக்கலை நகரசபை தலைவர் அசோக்கா சேபால மற்றும் சபை உறுப்பினர் இசார மஞ்சநாயக்க ஆகியோருடன் மேலும் இருவருடன் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மேலும் இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தாய், வளர்ப்பு தாய் மற்றும் தந்தை நகரசபை தலைவரின் இணைப்பு அதிகாரி என எட்டுபேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை சிறுமியையும் எஸ்.ஓ.எஸ் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்திருந்தது.
இந்த நிலையில் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நுவரெலியா பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி இன்னும் பல சிறுவர் சிறுமிகளை சட்டபூர்வமற்ற வகையில் சந்தேக நபர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் போதே சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இசார மஞ்சநாயக்கா வீட்டிலிருந்து இன்று அதிகாலை குறித்த 11 வயது சிறுவனையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவருக்கு வந்திருந்த காலத்திலிருந்து அவரின் தாய் எட்டு வருடமாக குறித்த வீட்டில் பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார்.இவர் பிறவியில் ஊமையானவர் ஆனாலும் தற்போது 11 வயதான சிறுவன் பேசக்கூடியவனாவான்.
இச்சிறுவனுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லை சட்ட விரோதமாகவே இச்சிறுவனை வளர்த்து வந்துள்ளதால் இவரையும் விற்பணைக்கா வைத்துள்ளனரா என்ற சந்தேகத்தில் சிறு வரை மீட்ட பொலிசார் நீதிமன்றில் இன்று மதியம் ஆஜர் செய்து பின் எஸ். ஓ.எஸ் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துள்ளனர்.
இதுவரை விளக்க மறியலில் எட்டுபேரும் பராமரிப்பு நிலையத்தில் இரண்டு சிறுவர்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டி.சந்ரு