தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு போட்டி பற்றிய பார்வை!!!

0
154

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு போட்டி பற்றிய பார்வை!

இன்றைய தினம் தலவாக்கலை பொது மைதானத்தில் நடைபெற்ற இல்லவிளையாட்டு போட்டிகள் அதிபர் கிருஸ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் மல்லிகாவும் நுவரெலியா கல்வி வலயத்தின் மேலதிக கல்வி பணிப்பாளர் மோகன்ராஜ் அவர்களும் அபிவிருத்தி உதவி கல்வி பணிப்பாளர் ஜெயராமன் உட்பட அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை வரலாற்றிலே பிரமாண்டமான மேடை அமைப்போடு அலங்கரிக்கப்பட்டிருந்த மேடை அனைவரினதும் பார்வையையும் இழுத்தது. விளையாட்டு போட்டிக்கு பொறுப்பாக செயல்பட்ட அதிபர் , பிரதி அதிபர்கள் உட்பட விளையாட்டு தலைவராக ஆசிரியர் சிவக்குமாரின் வழிக்காட்டலினூடாகவும் புஸ்பநாதனின் நேர்த்தியான எண்ணக்கருவோடும் விளையாட்டு நிர்வாக குழுவின் நவீன் உட்பட அனைத்து ஆசிரியர்களின் கூட்டு முயற்சியோடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

28233008_370933856645635_1497906692_n

நான்கு இல்லங்களோடு களமிறங்கிய தலவாக்கலை த.ம.வி ரூபகம் இல்லத்திற்கு ஆசிரியர் குணசேகரன் பொறுப்பாசிரியராகவும் பைரவி இல்லத்திற்கு ஆசிரியர் பார்த்தீபனும் ,தேனுகா இல்லத்திற்கு விஸ்வநாதனும் ,ஆரபி இல்லத்திற்கு செழியனும் பொறுப்பாசிரியர்களாக செயல் பட்டனர் அத்தோடு ரூபக இல்லத்தின் இல்லத்தலைவர்களாக தனுசன் , அஞ்சுதாவும், விளையாடுதலைவர்களாக கேதீஸ்வரன் , சுகன்யாவும் செயல்பட்டனர். பைரவி இல்லத்தலைவர்களக யதுர்ஷிகன், ஜெஸ்யந்தினியும் செயல்பட்டனர்.விளையாட்டு தலைவனாக முபாரக்கும் ஜெஷ்யந்தினியும் செயல்பட்டனர்.

தேனுகா இல்லத்தில் சான் ரேயுமன்., ஆர்திகாவும் தலைவர்களாகவும் விளையாட்டு தலைவர்களாக யதுர்சனும் நிமேஷாவும் செயல்பட்டனர். ஆரபி இல்லத்தின் தலைவர்களாக சரத்குமாரும், ஸ்ரீபிரியதர்ஷினியும் விளையாட்டு தலைவர்களாக தாமேஷ், நிசாந்தினியும் செயல்பட்டனர். வெற்றிக்கு நான்கு இல்லங்களும் போராடினாலும் இறுதியில் பைரவி வெற்றி வாகை சூடியது.

ஷான் சதீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here