அட்டனிலிருந்து காலி நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து பஸ் வண்டியை பிடிக்க சென்ற கார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியிலே 20.02.2018 காலை 5 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேன ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரியொருவர் குறித்த இ.பொ.ச பஸ் வண்டியில் கடிதமொன்றை வழங்க காரில் பின்தொடர்ந்து சென்றபோதே பாதையை விட்டு விலகி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தினால் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்