தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்லூரியின் பிரதான நுழைவாயிலும், விநோத சந்தையும் 23.02.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் வணக்கத்திற்குரிய டொமினிக் சந்தனம் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவரோடு, நுவரெலியா கல்வி வலய அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் நிர்வாகம் மற்றும் பெற்றோர்களின் நிதியில் இந்த புதிய நுழைவாயில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)