தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரோடையில் தவறி விழுந்து மரணமாகியுள்ளார்.
மரணமானவர் மிடில்டன் தோட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் வயது 25 என தெரிய வருகிறது.
இந்த விபத்து இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலமானது பிரேத பரிசோதனைக்காக லிந்துல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சுஜவன் தலவாக்கலை.