தலவாக்கலை மிடில்டன் கடை வீதியிலுள்ள கடை ஒன்று நேற்றிரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்கிருந்த பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கடையின் உரிமையாளர் நேற்றிரவு 9 மணியளவில் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்ற பின்னரே குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடையின் பின்புறமாக உள்ள யன்னல் உடைக்கப்பட்டு அதனுடாகவே கொள்ளையர்கள் கடையினுள் புகுந்து அங்கிருந்த பெருந்தொகை சில்லறை நாணயங்கள் மற்றும் நீசார்ஜ், ் அட்டைகள், டெனிஸ் பந்துகள், ஐஸ்கிரீம் , சிகரட் பைக்கட்டுகள் கையடக்கத் தொலைபேசி ஆகியன திருடப்பட்டுள்ளதாக உரிமையாள் தெரிவித்தார். சுமந் 1 1/2 லட்சத்திற்கும் _ மேல் பெறுமதியுடைய பொருட்கள் களவு போயுள்ளதாகவும் உரிமையாளர் கூறினார். இன்று காலை தனது வழமையான வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்த போதே அைட உடைக்கப்பட்டிந்ததை அவதானித்துள்ளார்.
தொடர்ந்து தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தஸ்ததிற்கு விரைந்த பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்தனர்.
அதே வேளை குறித்த கடைக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றின் சில்லு ஒன்றும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுஜீவன்