தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக்கசோபல நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யபட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நுவரெலியா காவல்துறையினரால் 03.06.2018.ஞாயிற்றுகிழமை இரவு 09மணிஅளவில் தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளரை அழைத்து சென்று விசாரனைகலை மேற்கொண்டபோதே தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தவிசாளர் கைது செய்யட்டதாக நுவரெலியா காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்
அக்கரபத்தனை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தபட்ட சம்பவம் தெடர்பிலும் குழந்தை ஒருவரை சட்டவிரோத மாக விற்பனை செய்யபட்ட சடம்பம் தொடர்பில் தலவாகலை லிந்துளை நகரசபையின் தலைவர் உட்பட் நான்கு பேர் கைது செய்யபட்டதாகவும் இந்த கடத்தல் விற்பனை சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு இடம் பெற்றதாக நுவரெலியா காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட தலவாகலை லிந்துளை நகரசபையின் தலைவர் அசோக்கசேபால உட்பட மேலும் நான்கு பேர் 04.06.2018திங்கள் கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவ நிருபர் – டி.சந்ரு