தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவாகியுள்ளார்

0
100

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவாகியுள்ளார்.

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவராக செயற்பட்ட அசோக சேபால சமீபத்தில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகேவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.

அதற்கிணங்க தலவாக்கலை லிந்துலை நகரசபையில் உபதலைவராக பதவி வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் லெட்சுமன் பாரதிதாஸன் தற்காலிக தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், இன்று (23) தலவாக்கலை லிந்துலை நகரசபையின் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

செய்தி-பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here