தலவாக்கலை லிந்துல்ல நகரசபை தலைவராக சுயேட்சை வேட்பாளர் அசோகா சேபால தெரிவு; உபதலைவர் பாரதி!

0
106

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலையடுத்து அங்கத்தவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுகளும் சபைகளுக்கான தலைவர் உப தலைவர்கள் தெரிவும் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எச்.எம்.யூ.பி.ஹேரத் தலைமையில் 27.03.2018 மாலை 2.30 மணியளவில் தலவாக்கலை லிந்துலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC04676DSC04667

இதில் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் திறந்து வாக்கெடுப்பிற்காக 5 பேரும் இரகசிய வாக்கெடுப்பிற்காக 7 பேரும் வாக்களித்தனர்.

இதனடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. இச்சபைக்கு தலைவரை தெரிவுசெய்வதற்காக சுயேட்சை குழுவொன்றில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அசோக சேபால மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்தன குணதிலக அவர்களும் போட்டியிட்டனர்.

இதில் 7 வாக்குகளைப் பெற்று அசோக சேபால அவர்கள் தலைவர் பதவிக்கு தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட சந்தன குணதிலக அவர்களுக்கு 5 வாக்குகளே பெறமுடிந்தது

இதேவேளை உபதலைவர் பதவிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக லெட்சுமன் பாரதிதாசன் அவர்களும், தாளமுத்து சுதாகர் அவர்களும் போட்டியிட்டனர். இதில் பாரதிதாசன் 6 வாக்குகளைப் பெற்று உபதலைவர் பதவியை தனதாக்கி கொண்டார். இதற்கு எதிராக போட்டியிட்ட தாளமுத்து சுதாகருக்கு 4 வாக்குகளே பெறமுடிந்தது.

இந்த உப தலைவர் தெரிவின்பொழுது ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன், உப தலைவர் பதவிக்காக பாலமுரளி என்பவரின் பெயர் முன்மொழியப்பட்ட போதிலும் எவரும் அதை வழிமொழியாததன் காரணமாக இவரின் பெயர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here