தலைமீது மரக்கிளை முறிந்து வீழந்ததில் மாணவி பலி – பூண்டுலோயாவில் சம்பவம்

0
41

வீதியில் சென்ற மாணவியின் தலைமீது மரக்கிளை முறிந்து வீழந்ததில் அவர் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மாணவிக்கே இந்த நிலை ஏற்பட்டதாக பூண்டுலோய காவல்துறையினர் தெரிவித்தனர்.

அக்கரபத்தனை பம்பரகெலே அபகன்லி தோட்டத்தில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது தந்தையுடன் அக்கரப்பத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவிதத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

மாணவியின் திடீர் மரணத்தால் பெற்றோர் உட்பட உறவுகள் கடும் துயரத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here