தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா..! இதை மட்டும் செய்தால் போதும்

0
68

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி தான். இன்றைய சூழலில், தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை சரி செய்ய முடியும்.முதலில், முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.

ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இரும்புச்சத்து, கல்சியம் போன்ற சத்துக்கள் இருந்தாலும் முடி கொட்டலாம். அதனால், ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.

அதேபோல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம். இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்.அதேபோல, மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம். அதேபோல, இளம்பெண்களுக்கு நீர்க்கட்டிகள் பிரச்சினைகள் இருந்தாலும், முடி கொட்டலாம்.

இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம்.

ஆக, நம்முடைய தலைமுடிக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது. நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
எனவே, ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.முடி வளர்ச்சிக்கு இரும்பு, ஜின்க், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள் தேவைப்படுகின்றன.

முடி கொட்டாமல் இருக்கவும், முடி அடர்த்தியாக வளரும் என்னென்ன சாப்பிட வேண்டும்? இதில், கீரைகள் முதலிடத்தை பிடிக்கின்றன. அதிலும் முருங்கைக்கீரையை சூப் வைத்து அல்லது ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால், ஆரோக்கியமான முடிகள் கிடைப்பதுடன், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

முருங்கைக்கீரை
முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும். அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கையின் ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்.

கறிவேப்பிலை
இந்தக் கறிவேப்பிலையை எந்த ரூபத்திலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.

செம்பருத்தி
செம்பருத்தி, தேங்காய் எண்ணெய் கலந்து வீட்டிலேயே எண்ணெய் தயார் செய்து வைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பு.செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை போட வேண்டும். அதில், சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கருகாமல் கொதிக்கவிட வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து கொள்ளலாம்.

வெண்டைக்காய்
வெண்டைக்காய் தலைமுடிக்கு மிகச்சிறந்த “இயற்கை தீ்ர்வாக” செயல்படுகிறது.

வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரில் சேர்த்து, சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, அந்த தண்ணீரில் தலைமுடியை அலசினால், தலைமுடி பளபளப்பு கிடைக்கும்.. முடிகள் உறுதியாகும்.

தண்ணீர் முக்கியம்
தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி கொட்டுதலை தவிர்க்க வேண்டுமானால், வஜ்ராசனம், உஸ்ட்ராசனம், சர்வாங்காசனம், சிரசாசனம், விபரீதகரணி போன்றவைகளை செய்ய வேண்டும்.

செயற்கை பொருட்களை தூக்கிப்போட்டுவிட்டு, இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவதுடன், முக்கியமாக, தண்ணீரை நிறைய குடித்தாலே போதும்.. தலைமுடி பாதுகாக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here