தலைமைத்துவத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். திலகராஜ் எம்.பி அறைகூவல் !

0
112

தலைமைத்துவம் இல்லாத எந்த ஒரு சமூகமோ அமைப்போ தடுமாற்றமான சூழ்நிலைக்கே தள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜ் தெரிவித்தார்

30.08.2017 வட்டவலை கரோலினா தோட்ட தியகல. பிரிவு மக்களுடனான சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தியகல தோட்டமானது பாரிய பின்னடைவை சந்தித்துள்ளமையானது தனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் பிரதான சாலைக்கு அருகில் அமையப்பெற்றுள்ள இத்தோட்டத்தில் சரியான தலைமைத்துவ முன்னெடுப்பு இல்லாமையே இதற்கான காரணமாக கண்டறிந்து கொண்டதாக இதன் போது தெரிவித்தார்.

எழுத்தாளர்கள் ஆசிரியர்கள் கிராம சேவகர்கள் என அரசு மட்டத்திலான அதிகாரிகள் இருந்தும் இங்கு பாரிய குறையாடுகளை கண்டு மனம் வருந்துவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தகுதியுடைய இளைய சமூகம் இத்தோட்டத்திற்கான தலைமையை ஏற்க முன் வரவேண்டும் என கூறியதோடு எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அதற்கான அத்திவாரத்தை இட முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தலைமைத்துவம் இல்லாத எந்த சமூகமும் முன்மாதிரியான சமூகமாக இருந்ததில்லை. எனவே எமது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு மக்களின் குறைதீர்க்க இளைய சமூகம் முன்வர வேண்டும் என்றார்.

ஒரு சமூகமாக செயற்படுவதன் மூலம் எங்களின் இலக்குகளை வெற்றி கொள்வது இலகுவானது என கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா அவர்கள் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தி திட்டங்களில் இப்பகுதியும் கட்டாயம் இணைத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

வட்டவலை மகளிர் அணி இணைப்பாளர் திருமதி. சசிகலாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெறுந்திரலானோர் கலந்து கொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here