பெண் தலைமைத்துவம் குறைந்துள்ளதன் காரணமாக இன்று பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தேவைகள் இன்று புறக்கணிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றன குறிப்பாக எமது நாட்டில் 55 சதவீத பெண்கள் காணப்பட்டாலும் அவர்களின் 5 சதவீதமே சட்டமேற்றும் பாத்திரத்தினை ஏற்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் கூட சாதாரண குடும்பங்களில் இருந்து சென்றவர்கள் அல்ல அவர்களின் பிண்ணனி காரணமாகவே அவர்கள் அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் மலையகப்பகுதியில் தலைமைத்துவ பாத்திரங்களில் பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் பெண் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு ஒன்று பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை பிரிடோ நிறுவனத்தின் அலுவலக மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
குறித்த செயலமர்வில் தலைமைத்துவ பாத்திரங்களை பெண்கள் ஏற்காததன் காரணமாக இவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
அரசியல் ரீதியாக இவர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுவதனால் இன்று பெண்களுக்கு ஏற்படும் அசாதாரண நிலவரங்களின் போது அவர்களுக்காக போதியளவு குரல் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் இதனால் மலையகத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் இருப்பதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டன.
பிரிடோ நிறுவனத்தின் செயத்திட்ட இணைப்பாளர் சந்திரசேகரன் ;அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்