தலைமையை கைப்பற்ற தருணம் பார்க்கும் அரவிந்தகுமார்? கருடனுக்கு வந்த மடல்!

0
165

இதொகாவை தாய்வீடாக கொண்ட இராதாகிருஷ்ணனின் அன்மைய நகர்வுகள் சிலகேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன.புகுந்தவீடான மலையக மக்கள் முன்னணிக்குள்ளும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருகின்றன.

மீண்டும் இதொகாவுக்குள் சென்றுவிடுவார்,அதன் தலைமை பொறுப்பை ஏற்க போகிறார் என பல எதிர்வு கூறல்கள் சொல்லப்பட்டு வருகின்ற நிலையில் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்திற்காக நாக்கை தொங்க போட்டுக்கொண்டு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் துறை தலைவருமான அரவிந்தகுமார் காத்துக்கிடக்கின்றார்.

ராதாகிருஷ்ணனைப்பற்றி பலவிடயங்களில் உண்மையிருந்தாலும் இத்தகைய விடயங்களை ஊதி பெறுப்பிப்பதில் அரவிந்தகுமார் மும்முரம்காட்டுகின்றார் என்பதும் உண்மை.

எல்ஜின் தோட்டத்தில் திருட்டுக்குற்றத்திற்காக வேலையையிழந்து வந்தவருக்கு அமரர் சந்திரசேகரன் அடைக்கலம் கொடுத்து உயர்த்திவிட்டார்.ஆனால் இவர் அவருக்கே முதுகில் குத்தியவர்.

முறையற்றவிதத்தில் நிதிசெயலாளர் பதவியை பிடித்து வைத்துக்கொண்டு அதன் மூலம் வயிறு வளர்த்தவர்.கட்சிக்குள் சிலரை வளைத்துப்போட்டுக்கொண்டு கணக்குவிபரங்களை காட்டாமல் கட்சி நிதியை கமுக்கமாக கையாடியவர்.

UPF என்பது UPCOUNTRY PEOPLES FRONT என்பதின் சுருக்கமாகும்,இவர் இதனை UVA PEOPLES FRONT என பெயர் மாற்றிக்கொண்டு (அதுவும் UPF தான்) பதுளை அங்கத்தவர்களின் சந்தாவை தன் சட்டை பையில் போட்டுக்கொண்ட கதையும் இருக்கிறது.மலையக மக்களின் கல்விக்காக என்று கட்சியின் பெயரில் அல்லது அவரின் UPF பெயரில் நிதியை பெற்று அதுதனக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் நிதி என கூறிக்கொண்டு ஏப்பம்விடுவதாகவும் சொல்லப்படுகின்றது.

”ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை” போல ராதாகிருஷ்ணனை சாய்க்கும்வரை காத்துக்கிடக்கிறது இந்த கொக்கு. ராதாகிருஷ்ணனை களத்தை விட்டு அகற்றுவதால் இவர் முக்கிய மூன்று சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து நிற்கிறார்.
கட்சி தலைமையை கைப்பற்றி நுவரெலியா மாவட்டத்தை தனது பிடிக்குள் கொண்டுவருவது.

தனது மகன் விராஜை பதுளையில் வளர்த்து விடுவது.
ஒரு இராஜாங்க அமைச்சையோ,பிரதியமைச்சையோ பெற்றுவிடுவது.
இவரின் இந்த செயற்பாடுகளுக்கு கட்சியின் மூத்த முக்கியஸ்த்தர்கள் சிலருக்கும் பங்கிருக்கின்றது.

கட்சியைதூக்கி நிறுத்துவதாக மார்தட்டிக்கொண்டும்,நிதிநிலைமையினை வளர்த்துக்காட்டுவதாகவும் கூறிக்கொண்டு நிதிசெயலாளர் பதவியினை பெற்ற புஸ்ப்பா எனப்படும் விஸ்வனாதன் மட்டுமே சரியாக சொன்னதை செய்துக்காட்டியுள்ளார்.
முன்னையைவிடவும் தற்போது அவரின் நிதி நிலைமையை உயர்த்திதான் வைத்துள்ளார்.

ராதாகிருஷ்ணனை ஆட்டுவிக்கும் சில கைகளில் இவர் முக்கியமானவர் இதொகா பக்கமான காய் நகர்த்தல்களுக்கு இவரின் பங்கு முக்கியமானது.முன்னாள் பிரதேச சபையின் தலவர் சதாசிவத்துடனான கூட்டு,பிணைப்பு இன்னும் தொடர்கின்றது ஆனால் பொதுவில் சதாசிவத்தை ஆகாதது போல் காட்டிக்கொண்டு வியாபார காய்நகர்த்துவதில் சாமர்த்தியசாலி.அப்பாவி மக்களின் சந்தாபணத்தில் வயிறு வளர்க்கும் இவர்கள் போன்றோருக்கு தான் காலமாக இருக்கிறது.
கடவுளே கண்ணிலையா என்று கேட்போருக்கு ,அந்த ஆறுமுகம்தான் தான் பதில் சொல்ல வேண்டும்.

மலைக்கள்ளன்.

இது கருடனின் கருத்தல்ல, மறுப்பு அறிக்கைகள் வேற்றுமையின்றி இங்கே பிரசுரமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here