தலையும் வாயும் இல்லாமல் பிறந்த அபூர்வ குழந்தை!

0
127

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில்,மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அரிய மற்றும் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா தொகுதிக்கு உட்பட்ட குலபதா கிராமத்தில் தலை மற்றும் வாய் இல்லாத விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தையின் பெற்றோர் சுடாமணி ஹன்ஸ்தா (Chudamani Hansda) மற்றும் பப்லு மகாரானா (Bablu Maharana) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆதாரங்களின்படி, சுடாமணி பிரசவ வலியால் துடித்ததை அடுத்து நோயாளர் காவு வண்டியில் பாங்கிரிபோசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் நோயாளர் காவு வண்டியிலேயே அவர் தனது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.இதன்போது குழந்தை வாயும் தலையும் இல்லாமல் பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது.

இதனைதொடர்ந்து குழந்தையின் தாய் சுடாமணி, பாங்கிரிபோசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலையின்றி குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here