இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு இந்த நாட்கள் அவ்வளவு நல்லா இல்லை போல் உள்ளது…
தற்போது நடைபெறும் லங்கா பிரீமியர் லீக்கில் சட்ட விரோதமான முறையில் ஆடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை T20 மற்றும் Candy Falcons அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு USD 3600 (11 இலட்சம் இலங்கை ரூபா) அபராதம் விதிக்க LPL போட்டிக் குழு தீர்மானித்துள்ளது.
வனிந்து ஹசரங்க இந்த ஆண்டுக்கான போட்டியில் பெற்ற போட்டி கட்டணத்தில் இருந்து இந்த அபராதத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப் போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் அந்தந்த அணிகளின் நிறங்களுடனான தனித்தனியான ஆடைகளும் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில் வனிந்து ஹசரங்க வித்தியாசமான சின்னத்துடன் கூடிய ‘ஹெல்மெட்’ அணிந்து களத்திற்கு வந்துள்ளார்.
அங்கு அயர்லாந்து அம்பயர் ரோலி பிளாக் அதை கழற்றுமாறு அவருக்கு அறிவித்தார், ஆனால் அம்பயரின் முடிவுக்கு கீழ்ப்படியாததால் இந்த அபராதம் விதிக்கப்பட உள்ளது.கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர் பிரதான நடுவரின் முறைப்பாட்டின் பிரகாரம் வனிந்துவிற்கு எதிரான அபராதத்தை போட்டி நடுவர் கிரேம் லப்ரோய் கண்டி அணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்…
இச்சம்பவம் காரணமாக எல்.பி.எல் போட்டியின் அனைத்து வீரர்களும் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஆடைகளை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு போட்டிக் குழு அறிவித்துள்ளது.மேலும், போட்டிகளின் முடிவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு வீரர்கள் முழு விளையாட்டு உடைகளை சரியாக அணிந்து வருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.