தவறான காணொளிகள் வெளிநாட்டுக்கு விற்பனை; சிக்கிய ஜோடிகள்

0
54

தவறான காணொளிகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த இளம் தம்பதியினர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் முன்னர் வசித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மற்றொரு தம்பதியினர் இருந்ததும் அவர்கள் மோசடியில் நேரடியாக ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.இதன்போது கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு தம்பதியினரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதோடு கைதுசெய்யப்பட்ட தம்பதியர்கள் மயக்க மருந்து மாத்திரைகள் வைத்திருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here